இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து அப்துல் ரஸாக் தொடர்ந்து பெரும் கூற்றுக்களை முன்வைத்து வருகிறார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை "குழந்தை பந்து வீச்சாளர்" என்று அழைத்த ஒரு நாள் கழித்து, பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக், இந்திய கேப்டன் விராட் கோலி சீரானவர், ஆனால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முற்றிலும் வேறுபட்டவர் என்று கூறியுள்ளார். "1992 முதல் 2007 வரை நாங்கள் விளையாடிய அதே உலகத்தரம் வாய்ந்த வீரர்களை நாங்கள் காணவில்லை. டி20 கிரிக்கெட் ஆட்டத்தை மாற்றியுள்ளது. பந்துவீச்சு, பேட்டிங் அல்லது பீல்டிங்கில் ஆழம் இல்லை. இது இப்போது எல்லாமே அடிப்படையாக தான் உள்ளது,” என்று ரஸாக் கிரிக்கெட் பாக்கிஸ்தான்.காமில் கூறினார்.